விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை வண்ணார்பேட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய தொழிலாளர்களுக்கு சட்டப்படியாக ரூ.600 கூலி உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும், நெல்லை மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை வைத்துள்ள அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத் தலைவர் சுடலைராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.