அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-08 18:45 GMT

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன்‌ தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்‌ பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் இளவேனில், சண்முகம், குணசேகரன் காவேரி, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை பாதிக்கும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பணி நிரந்தரம்

புதிய ஓய்வூதிய‌ திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்