ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
விருதுநகர், காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தாலுகாக்களில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சிலரை முன்னறிவிப்பின்றி இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல ராஜபாளையத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.