போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி சேலம், ஆத்தூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி சேலம், ஆத்தூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-30 23:01 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். மேட்டூர் தொகுதி சதாசிவம் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், வக்கீல் விஜயராசா, செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நடவடிக்கை

இது குறித்து அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் போதை பொருள் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக போதை பொருட்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி, ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கண்ணையன், செயலாளர் குணசேகரன், பா.ம.க. மாவட்ட தலைவர்கள் முருகேசன், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பச்சமுத்து வரவேற்றார். மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி மற்றும் குணசேகரன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் அப்பமசமுத்திரம் ஆர்.பார்த்திபன் படையாச்சி, நிர்வாகிகள் மயில்சாமி, சடையப்பன், அய்யம்பெருமாள், சங்கர், தினேஷ், செந்தில், கனகராஜ், குமரேசன், ராமசாமி, பொன்னுசாமி, பழனிசாமி, சரவணன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஆத்தூர் நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்