ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் காஜா செரீப், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டி ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தேர்தல் ஆணையாளர் ஆறுமுக நயினார், மகளிர் அணி துணை செயலாளர் சுப்ரியா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.