ஆர்ப்பாட்டம்
இளையான்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளையான்குடி,
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து இளையான்குடி கண்மாய் கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா கமிட்டி செயலாளர் ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயந்தி, முத்துராமலிங்க பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் மலைராஜ், பரிசுத்தமங்களசாமி, இன்னாசி ராஜா, முத்துவேல், கணேசன், ஆறுமுகம், மாரி, அம்பலம், ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.