அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துதாரமங்கலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்50 பேர் கைது

Update: 2023-09-07 19:54 GMT

தாரமங்கலம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்து மத தலைவர்களும். பா.ஜனதா கட்சி தலைவர்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக கூறி உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கோரி சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அமைப்பின் சேலம் மேற்கு கோட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் நிர்மலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தாரமங்கலம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் உரிய அனுமதி வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

இதே போல், தம்மம்பட்டியிலும் இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தம்மம்பட்டி பஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரசாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பா.ஜனதா மாவட்ட தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துறை துணைத்தலைவர் சுரேஷ், மற்றும் ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தம்மம்பட்டி போலீசார் கைது செய்து பேரூராட்சி திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்