காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கறம்பக்குடி அக்னி ஆற்றையும் சேர்க்க கோரிக்கை

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கறம்பக்குடி அக்னி ஆற்றையும் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-24 18:36 GMT

கறம்பக்குடி:

கறம்பக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க 6-ம் ஆண்டு பேரவை பொதுக்குழுக் கூட்டம் வட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர்கள் பக்கிரிசாமி, சிவ திருமேனிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கறம்பக்குடி அக்னி ஆற்றையும் சேர்த்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற செய்ய வேண்டும். கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். அரசு பஸ்களில் ஓய்வூதியர்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்