கிராமப்புற சாலைகளை உயர்த்தி அமைக்க கோரிக்கை

கிராமப்புற சாலைகளை உயர்த்தி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2023-08-06 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை நகருக்கு வெளியே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் அருகே பல்வேறு கிராமங்களுக்கு கிராம சாலைகள் செல்கிறது. இதுபோன்ற சாலைகளில் ஒரு சில சாலைகளை தவிர மற்ற சாலைகள் உயர்த்தப்படாமல் அப்படியே பள்ளமாக உள்ளது. இதன் காரணமாக கிராம பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் திருச்சி-ராமேசுவரம் சாலையில் ஏறும்போது விபத்தில் சிக்குகின்றனர்.

தேவகோட்டையை சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் போது மார்க்கண்டன்பட்டி-பனசமக்கோட்டை கிராமத்திற்கு சாலை செல்கிறது.அந்த சாலை பிரதான சாலைகளில் இருந்து மிக பள்ளமாக இருப்பதால் சாலையில் ஏறும்போதும், இறங்கும்போதும் விபத்து ஏற்படுகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்ட எல்லை முடிவான கருமொழி அருகே கீழே இறங்கும் மருதவயல் கிராம சாலையும் இதே நிலையில் தான் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பிரதான சாலையின் உயரத்திற்கு தகுந்தாற்போல் பள்ளமான சாலையை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்