அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்நிலையம்
அருப்புக்கோட்டை ெரயில்நிலையம் வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில், விருதுநகர்- காரைக்குடி ரெயில் உள்பட பல்வேறு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அருப்புக்கோட்டை ெரயில் நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை ெரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்ைல என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடிப்படை வசதிகள்
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
அருப்புக்ேகாட்டை ரெயில் நிலையத்தை தினமும் எண்ணற்ற பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் காட்சி பொருளாக மாறிவிட்டது.
அதேபோல் இங்குள்ள கழிப்பறையும் பயன்பாடு இல்லாமல் பூட்டப்பட்டு உள்ளது. விருதுநகர் வழியாக சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆதலால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ெரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ேமம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.