ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-26 17:46 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட வழி வகை செய்யப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம்.

மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்