மானை சமைத்து சாப்பிட முயன்றவர்களுக்கு வலைவீச்சு
மானை சமைத்து சாப்பிட முயன்றவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தீயனூர் செல்லும் சாலை அருகே ஆண் புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த மர்ம நபர்கள் சிலர் இறந்த மானை அருகே உள்ள காட்டு பகுதிக்குள் எடுத்து சென்று சமைத்து சாப்பிட முயன்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.