கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

திருப்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-09 17:19 GMT

வீரபாண்டி

திருப்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதலுக்கு எதிர்ப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் விஜி (வயது 20). இவர் தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் திருப்பூர்-மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துள்ளார்.

இவர் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதல் விவகாரம் விஜியின் தாயாருக்கு தெரியவந்தது. இதை அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த விஜி கடந்த 7-ந்தேதி பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தாயார் திருப்பூர் சென்ட்ரல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் பாராபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ட்ரல் போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சென்றனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை

பின்னர் அந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு அவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்த விஜியின் பெற்றோரை வரவழைத்து அந்த உடலை காண்பித்தனர். அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தது விஜி என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து விஜியின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதலை பெற்றோர் எதிர்த்ததால் கிணற்றில் குதித்து விஜி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கிணற்றில் குதித்து இளம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்