செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பதிவுத்துறை வழங்கும் சேவைகளான பத்திரப்பதிவு, பத்திரம் திரும்ப பெறுதல், திருமணப்பதிவு, திருமண சான்று, வில்லங்கச் சான்று, பத்திர நகல் வழங்குதல், பிறப்பு இறப்பு சான்று வழங்குதல், சங்கம் பதிவு, சீட்டுப்பதிவு, கூட்டான்மை நிறும பதிவு, வழிகாட்டி மதிப்பு மற்றும் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பான புகார்களை செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது செங்கல்பட்டு துணைப் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திலோ பிரதி திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பதிவு குறைதீர்க்கும் முகாம்களில் மனு அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.