பெண்ணுக்கு கொலை மிரட்டல்

போடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-01-02 18:45 GMT

போடி குலாலர்பாளையம் கரட்டுப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். போடி சுப்புராஜ் நகர் புது காலனியை சேர்ந்தவர் தமிழன். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மணிமாறன் வீட்டிற்கு தமிழன் சென்று கதவை சேதப்படுத்தி, அவரது மனைவிைய தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்