மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

களியக்காவிளை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

Update: 2022-05-23 20:16 GMT

களியக்காவிளை, 

களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபின் (வயது 32), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று இவருடைய செல்போன் தண்ணீரில் விழுந்துள்ளது. இதனால், செல்போனை வெயிலில் உலர வைப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு செல்போனை உலர வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்