அரசு பஸ் மோதி தொழிலாளி சாவு
சூளகிரி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.
ஓசூ
சூளகிரி தாலுகா கன்னசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது24). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், மோட்டார் சைக்கிளில் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.