வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

Update: 2022-12-14 12:56 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகர் பஸ் நிறுத்தம் அருகே சம்பவத்தன்று இரவு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிரிழந்த நபர் பச்சை, நீல நிறம் கலந்த கட்டம் போட்ட சட்டையும், நீல, வெள்ளை நிறம் கலந்த கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்