விஷ பூச்சி கடித்து சிறுமி பலி

விஷ பூச்சி கடித்து சிறுமி பலியானாள்.

Update: 2022-12-09 18:45 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மகள் வைஷ்ணவி (வயது 13). இவள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று இரவு சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தாள். அப்போது வைஷ்ணவியை விஷ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. அதில் அவள் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவளுடைய தாய் சாந்தி, வைஷ்ணவியை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வைஷ்ணவி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்