வாகனம் மோதி வடமாநில தொழிலாளி சாவு

சூளகிரி அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி சாவு

Update: 2022-11-22 18:45 GMT

சூளகிரி

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கனுமுன்டா (வயது 39). இவர் சூளகிரி பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கனுமுண்டா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்