தீயில் கருகிய பெண் சாவு

கிருஷ்ணாபுரம் அருகே தீயில் கருகிய பெண் இறந்தார்.

Update: 2022-07-26 17:15 GMT

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கோணப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்