தீக்குளித்த மசாஜ் தொழிலாளி சாவு
ஒகேனக்கல்லில் தீக்குளித்த மசாஜ் தொழிலாளி இறந்தார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 33.) மசாஜ் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 24-ந் தேதி கோவிந்ததராஜ் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.