பாப்பிரெட்டிப்பட்டி அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள்மோதி மெக்கானிக் பலி

Update: 2023-09-04 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் பலியானார்.

மெக்கானிக்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சின்னாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பழனி. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவருடைய மகன் வெற்றிவேல் (வயது 27). இவர் அரூரில் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். வெற்றிவேல், அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையின் காரணமாக அரூர் வரை சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அரூர்- சேலம் மெயின் ரோட்டில் விஜயநகரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது ரோட்டில் நிறுத்தி இருந்த லாரியின் பின்பக்கத்தில் வெற்றிவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

பரிதாப சாவு

இதில் பலத்த காயம் அடைந்த வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா விசாரணை நடத்தினர்.

விபத்தில் மெக்கானிக் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்