தனியார் பள்ளியில்மயங்கி விழுந்து மாணவி சாவு

Update: 2023-08-14 17:23 GMT


அவினாசி அருகேதனியார் பள்ளியில்மாணவி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

தனியார் பள்ளி மாணவி

அவினாசியை அடுத்த நல்லி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மகள் காந்தேஸ்வரி (வயது 13).

இவர் அவினாசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு இடது காலில் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு வீக்கம் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பள்ளியில் இறைவணக்கம் முடிந்து வகுப்பதனியார் பள்ளியில்மயங்கி விழுந்து மாணவி சாவுறைக்கு சென்ற மாணவி காந்தேஸ்வரி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மாணவி சாவு

உடனடியாக அவரைஅருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். அவரது உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவிற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்