வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்

அதிராம்பட்டினத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தன.

Update: 2023-08-10 20:38 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தன.

சுட்டெரிக்கும் வெயில்

அதிராம்பட்டினம் பகுதியில் சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் கால்நடைகளும், நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கிராம பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்து வறண்டு வருகிறது. அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை உப்பளங்களுக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் எந்த நேரமும் தண்ணீர் இருக்கும்.

செத்து மிதக்கும் மீன்கள்

இந்த நிலையில் தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், சில நாட்களாக வாய்க்காலில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் இந்த வாய்க்காலில் உப்பு உற்பத்தி செய்வதற்கு கடலில் இருந்து நீர் வரவழைக்கும் வாய்க்காலாக உள்ளது. இந்த வாய்க்காலில் அதிக அளவில் மீன்கள் உற்பத்தியாகும். வாய்க்காலின் தரைப்பகுதியில் இருந்து வீச்சு வலை வீசி மீன் பிடிக்கும் மீனவர்கள் இந்த வாய்க்காலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாவதால், வாய்க்காலில் நீரின் தட்ப வெப்பநிலை மாறுகிறது. அதற்கு ஈடுகொடுக்க முடியாமல், மீன்கள் செத்துவிடுகின்றன மறுபக்கம் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் வறண்ட நிலையில் காணப்படுவதோடு சின்ன மீன்களும் செத்து விடுகின்றன என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்