சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு
8-வது நாளாக ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் நாளை மனு அளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் போலீசார் ஆய்வு
சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் விளக்கம் கேட்டனர்.
"அன்று தர்மயுத்தம் செய்தோம்.. ஆனால் இன்று...!!" வெளிப்படையாய் பேசிய மா.பா.பாண்டியராஜன்சென்னை,
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பழனிசாமி இல்லத்துக்கு சென்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,
ஒற்றை தலைமையை தான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். எங்களுடைய வருகையை பார்த்து தொண்டர்கள் அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு வியப்பு. அதிமுகவினர் அனைவரும் ஒரு தலைமைக்கு கீழ் வந்து செயல்படுவதுதான் காலத்தின் கட்டாயம் என்று நான் நம்புகிறேன். இதில் மனசாட்சிக்கு எது படுகிறதோ அதையே அன்றும் செய்தேன், இன்றும் செய்கிறேன்.
தற்போது கட்சி ஒரு தலைமைக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல் நிலவியுள்ளது. எனென்றால் எந்த ஒரு முடிவு எடுக்கவும் காலதாமதம் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.