ஆபத்தான வேளாண் விரிவாக்க கட்டிடம்

முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் பழமையான வேளாண் விரிவாக்க அலுவலக கட்டிடம் உள்ளது.

Update: 2023-06-18 18:45 GMT

முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் பழமையான வேளாண் விரிவாக்க அலுவலக கட்டிடம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அச்சப்படுகின்றனர். மேலும் இங்கு பணியில் ஈடுபடும் வேளாண் துறை அலுவலர்களும் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு ஆபத்தான வேளாண் விரிவாக்க கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்