அந்தாளி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஆயக்காரன்புலம் அந்தாளி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியில் உள்ள அந்தாளி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினம்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா காட்சியும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரானை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.