அருணாசலேஸ்வரர் கோவிலில் கோபுர சிற்பம் சேதம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கேமரா பொருத்தியதால் கோபுர சிற்பம் சேதமானது.

Update: 2022-11-29 17:13 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன. இதில் திருமஞ்சன கோபுரத்தின் அருகில் 5-ம் பிரகாரத்தில் தெற்கு கட்டை கோபுரம் அமைந்து உள்ளது. 5 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 70 அடியாகும்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் பாதுகாப்பு பணிக்காக தனியார் நிறுவனம் மூலம் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது தெற்கு கட்டை கோபுரத்தில் இடம் பெற்று இருந்த காவல் தெய்வம் சிற்பத்தின் மீது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதை கண்டு பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில் அலுவலர்கள் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தியதால் சேதமடைந்த சிற்பம் உடனடியாக சீரமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்