பழுதடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்

தஞ்சை அண்ணாமலை நகரில் பழுதடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Update: 2023-08-29 21:33 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை அண்ணாமலை நகரில் பழுதடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தரைப்பாலம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் அண்ணாமலை நகர் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. அதன் கீழ்பகுதியில் கல்லணைக்கால்வாய் பகுதிக்கு செல்லும்படி கழிவுநீர் கால்வாயும் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தரைப்பாலம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பாலத்தின் பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் செல்லும் போதும் பாலம் அதிர்கிறது.

குப்பைகள்

இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் பாலத்தில் உள்ள சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் தேங்கி சாக்கடையாக மாறி உள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தை சீரமைக்கவும், கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்