தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 21:09 GMT

தென்மண்டல தலித் கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்கம் மற்றும் இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கம், பாளையங்கோட்டை மறை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு ஆகியவை இணைந்து நெல்லையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மறை மாவட்ட செயலக முதல்வர் ஞானபிரகாசம் முன்னிலை வகித்தார். சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றிஜெரோம், தலித் கிறிஸ்தவர் நல இயக்க நிறுவனர் பேராயர் தனராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தவர்களாக சேர்க்க வேண்டும். என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் கோபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துவளவன், தென்மண்டல கிறிஸ்தவர்கள் இயக்க தலைவர் இலோசியஸ், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்