தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய குறைகள் விவரம் வருமாறு.
குளத்தை தூர்வார வேண்டும்
திங்கள்நகரில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் காக்கப்பொன்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது, தூர்வாரப்படாமல் பாசிகள் படர்ந்து தண்ணீர் மாசடைந்து பொதுமக்ககள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ். திலகராஜ், சேங்கரவிளை.
மின்கம்பத்தில் படர்ந்த கொடி
குலசேகரம்-திற்பரப்பு சாலையில் குருவிப்பொற்றைக்கரைக்காடு விலக்கு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் செடிகொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால், மின்வினியோகத்தில் தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, மின்கம்பத்தை ஆக்கிரமித்த ெசடி கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவதாஸ், குலசேகரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
குமாரபுரத்தில் இருந்து மணலிக்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பிளாஸ்டிக் சாக்குகளில் கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம்வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மேசியா, குமாரபுரம்.
புதர்களை அகற்ற வேண்டும்
ராஜாக்கமங்கலம்-ஈத்தாமொழி மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் காலை-மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்த சாலையோரங்களில் முட்புதர்களும், செடிகளும் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
வீணாகும் குடிநீர்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்காட்டில் இருந்து நாகர்கோவில் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராட்சத குழாய்கள் சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ெபரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.எபிஜாண்சன், பூதப்பாண்டி.