தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-19 18:30 GMT

சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் மருத்துவ கழிவுகள் 

கரூர் மாவட்டம், நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே தார் சாலையின் ஓரத்தில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிக்கறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கோழி கழிவுகளையும், மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் மூட்டை, மூட்டையாக போட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை பெய்து வருவதால் அந்த கழிவுகள் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டுவருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் இந்த கழிவுகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நாணப்பரப்பு.

மின்மாற்றி மாற்றப்படுமா?

கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களும், மின்மாற்றியும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்கள், நடையனூர்.

ஊராட்சி சேவை மையத்தை திறக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சேவை மையத்திலிருந்து விவசாயிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் இங்கு கட்டிடம் கட்டுப்பட்டு பல ஆண்டுகளாகியும் சேவை மையம் தனது சேவையை துவங்காமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது .இதன் காரணமாக திருக்காடுதுறை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வேலாயுதம்பாளையம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சேவை மையங்களுக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இதனால் தங்களது பகுதியில் சேவை மையம்இருந்தும்வெளியூர்களுக்கு சென்று சான்றிதழ்கள் பெற்று வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருக்காடுதுறை.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி முத்து நகரில் உள் 2 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், பகல் இரங்களில் நடந்து செல்லும் முதியவர்கள், குழந்தைகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், காதப்பாறை.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம், கடைவீதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், தளவாப்பாளையம். 

Tags:    

மேலும் செய்திகள்