தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், வாங்கலிருந்து இருந்து நல்லாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் மெயின் சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வாங்கல்
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் பிரிவு சாலை அருகே அப்பகுதி பஸ்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி பயணியர் நிழற்கூடை கட்டப்பட்டது. இந்தநிலையில் பயணியர் நிழற்கூடை அருகே பஸ்கள் நிற்காமல் சென்றதன் காரணமாக அதனை பயணிகள் பயன்படுத்த வில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையின் உள் பகுதியில் செடி, கொடைகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஓலப்பாளையம்.
பழுதடைந்த பாலம்
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே கோம்புப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.இந்நிலையில் கட்டப்பட்ட பாலத்தின் கைபிடிசுவர்கள் இடிந்து உள்ளது. அதேபோல் பாலம் பழுதடைந்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கோம்புப்பாளையம்.
ஆபத்தான குடிநீர் தொட்டி
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கரூர் பாளையம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது . இந்த தொட்டியை தாங்கி நிற்கும் 4 தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது . குறிப்பாக ஒரு தூணின் அடி மட்டத்தில் கான்ங்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு மிக மோசமாக உள்ளது . இது தொட்டியில் நிரப்பப்படும் நீரின் எடை தாங்காமல் கம்பிகளில் வளைவு ஏற்பட்டு முறிந்து விடக்கூடிய சூழ்நிலையில் தொட்டி கீழே விழக்கூடிய நிலை ஏற்படும் . இது அந்த பகுதியில் நடமாடும் பொதுமக்கள், பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் உட்பட பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விட கூடிய சூழ்நிலை உள்ளது . எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் தொட்டியின் தூண்களை வலிமைபடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்களும் , பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்கள், வெள்ளியணை.
தள்ளுவண்டி கடைகளால் அவதி
கரூர் காந்கிராமம், அரசு மருத்துவக்கல்லூரி அருகில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டி கடைகள் அதிகம் உள்ளன.
இதனால் அங்கு நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தங்ளது இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்ஙகு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். அங்குள்ள தள்ளுவண்டி கடை முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் தடுக்கின்றனர். மற்றும் அவசர ஆம்புலன்ஸ் செல்லமுடியாத அளவில் ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.