தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-30 16:52 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடப்பதால் அந்தபகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 9-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, குப்பை தொட்டிகள் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சம்பத்குமார். ரெட்டிப்பாளையம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அம்மன் நகர் உள்ளது. அம்மன் நகர் வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் அம்மன் நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கொளந்தாகவுண்டனூர்.

பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா? 

கரூரில் இருந்து வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில்மணவாடி பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் வந்து மணவாடி, அய்யம்பாளையம்,பெரியார் நகர், கத்தாளப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் வந்து தினந்தோறும் பஸ் ஏறியும் இறங்கியும் செல்கின்றனர். அவ்வாறு வரும் பொது மக்கள் பசுக்காக காத்திருக்கும் போது நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது இடித்து அகற்றி விட்டனர். எனவே பஸ்க்காக காத்திருக்கும் பயணிகள் நலன் கருதி புதிய பயணியர் நிழல் குடை அமைத்து தர வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணவாடி

மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை 

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள முத்தனூரில் தார் சாலையின் ஓரத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்.

வேகத்தடையில் வர்ணம் பூசாததால் தொடர் விபத்து

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காகித ஆலை நெடுகிலும் தார் சாலையில் குறுக்கே ஆங்காங்கே ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளி்ல் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், புன்னம்சத்திரம்.

Tags:    

மேலும் செய்திகள்