தென்திருப்பேரையில் சூறைக்காற்று:மரம்- மின்கம்பங்கள் சாய்ந்தன

தென்திருப்பேரையில் வீசிய சூறைக்காற்றில் மரம்- மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

Update: 2023-07-21 18:45 GMT

தென்திருப்பேரை:

தென்திருப்பேரையில் நேற்று காலை முதல் சூறைக்காற்று வீசி வந்தது. மாலை 5 மணியளவில் தெற்குரதவீதி, மேலரதவீதியில் 3 புளியமரங்கள் அடுத்தடுத்து வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் விழுந்து, அந்த பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் முறிந்தன. மின்ஒயர்களும் அறுந்து தொங்கின. தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் மின்விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து கீழே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மீண்டும் மின்சப்ளை செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்