கரிதுகள்களை கட்டுப்படுத்த வேண்டும்

சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரிதுகள்களை கட்டுப்படுத்த வேண்டும் மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் கோரிக்கை

Update: 2022-12-22 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரும்பு புகைகளில் இருந்து அதிகளவில் கரி துகள்கள் வெளியேறுகிறது. இந்த கரி துகள்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காற்றில் பறந்து செல்கிறது. இதன் காரணமாக காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்கக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் சர்க்கரை ஆலையில் இருந்து கரி துகள்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கரி துகள்கள் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் ராஜாராம், பொருளாளர் கோகுல்ராம், மாநில இணை செயலாளர் ஏ.எஸ்.வாசன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்