தெளிப்பு நீர் பாசனம் மூலம் பூக்கள் சாகுபடி

கம்பம் அருகே தெளிப்பு நீர் பாசனம் மூலம் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-02 18:45 GMT

கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் விவசாயிகள் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, நூல்ேகால், கொத்தமல்லி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வந்தனர். இதேபோல் ரோஜா, அரளி, செவ்வந்தி, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர். தோட்ட பயிர்களை பொறுத்த வரையில் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக ஆழ்துளை கிணறு, கிணற்றுப்பாசனம் மூலம் வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சும் போது அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் எதிர்பார்த்த மகசூல் பெற முடியவில்லை. இதையடுத்து மத்திய, மாநில அரசு குறைந்த அளவு தண்ணீரில் நல்ல மகசூல் பெறும் வகையில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு மானியம் வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து காய்கறி சாகுபடி செய்துள்ளனர். தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பரவலாக விழுவதால் நிலம் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்கிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதேபோல், கம்பம் அண்ணாபுரம் பகுதியில் தெளிப்பு நீர் பாசனம் மூலம் பூக்கள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தெளிப்பு நீர் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்வதால் வழக்கமாக பெறும் மகசூலைவிட அதிக அளவில் கிடைக்கிறது. மேலும் தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் தேவையில்லை. தண்ணீரும் குறைந்த அளவே செலவாகிறது. இதனால் தெளிப்பு நீர் பாசனம் மூலம் பூக்கள் சாகுபடி செய்து வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்