கடலூர்- கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர உத்தரவு

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கடலூரில் பாமக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

Update: 2023-03-10 12:34 GMT

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கடலூரில் பாமக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. என்.எல்.சி. சிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தவேண்டுமென இந்த போராட்டமானது நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து கடலூரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல, கடைகளை திறக்கும் அனைத்து வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் நிறுத்தப்படும் பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவருமாறு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்