யூடியூப் சேனலில் அண்ணாமலை குறித்து விமர்சனம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜனதாவினர் புகார்

யூடியூப் சேனலில் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ததால் பா.ஜனதாவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-08-06 18:30 GMT

பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் செல்வராஜ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரை குறித்தும், அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளையும் யூடியூப் சேனலில் தொடா்ந்து விமர்சனம் செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் அந்த தனியார் யூடியூப் சேனலின் நெறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா அலுவலக செயலாளர் ராஜகுமார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்