அதகபாடியில் கிரிக்கெட் போட்டி தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்

Update: 2023-07-15 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் அதகபாடி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 12-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளை தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். முன்னதாக விளையாட்டு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பசுவராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, அரூர் பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யா தனபால், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு துணை தலைவர் பெரியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்