பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-19 19:09 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மாரனேரி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்தது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் தரைசக்கரம், பூந்தொட்டி, அணுகுண்டு போன்ற பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இந்த ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த குமரேசன் (வயது28), பள்ளப்பட்டி இந்திராநகரை சேர்ந்த சுந்தர்ராஜ் (35), சிவகாசி ரிசர்வ்லைன் சிலோன் காலனியை சேர்ந்த அய்யம்மாள் (58) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் ஆலையின் உரிமையாளர் கடற்கரை, போர்மென் காளியப்பன், ஒப்பந்தக்காரர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போர்மென் காளியப்பன் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆலையின் உரிமையாளர் கடற்கரை (73) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பட்டாசு ஆலையில் விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது.


Tags:    

மேலும் செய்திகள்