மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி 2 மாடுகள் இறந்தன. மின்வாரியத்தை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-17 16:52 GMT

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி 2 மாடுகள் இறந்தன. மின்வாரியத்தை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாடுகள் சாவு

சிவகங்கை அருகே உள்ளது சாமியார்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், கோபால். இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். சாமியார்பட்டி பைபாஸ் ரோட்டில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி  திடீரென அறுந்து விழுந்து சாலையில் கிடந்தது.

இந்நிலையில் ராஜ்குமார் வளர்த்து வந்த ஒரு மாடும், கோபால் வளர்த்து வந்த ஒரு மாடும் அந்த வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் அந்த 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

சாலைமறியல்

இதையடுத்து சாமியார்பட்டி கிராம மக்கள் மின்வாரியத்தை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சிவங்கை தாசில்தார் தங்கமணி தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்