மாடு திருடியவர் கைது

மாடு திருடியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-26 20:50 GMT

ராதாபுரம்:

ராதாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கல்யாணி. இவர் தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற ேபாது, ஒரு மாட்டை காணவில்லை. இதுகுறித்து ராதாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் நாகர்கோவில் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த நாராயணன் மகன் முத்துக்குமார் என்பவர் மாட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முத்துக்குமாைர கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்