நாமக்கல் அருகே தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

நாமக்கல் அருகே தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

Update: 2022-07-04 14:04 GMT

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நருவலூரை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த மாடு நேற்று வீட்டின் அருகே உள்ள சுமார் 8 அடி ஆழம் கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டது.

இதுகுறித்து பழனிசாமி நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தொட்டியின் அருகே குழி தோண்டு மாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்