கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு மீட்பு
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கத்திஜா பீவி. இவருடைய பசு மாட்டை காலையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டபோது, கரிசல்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பயன்பாட்டில் இருந்து வந்த மகளிர் சுகாதார வளாகத்திற்காக கட்டப்பட்டு இருந்த கழிவுநீர் தொட்டி மூடி இடிந்து சுமார் 8 அடி ஆழம் உள்ள தொட்டிக்குள் பசு மாடு தவறி விழுந்து உள்ளது. இதை கண்ட அக்கம்- பக்கத்தினர் திருச்சி மாவட்டம், துவரங் குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த சிறப்பு நிலைய அலுவலர் நாகவிஜயன் தலைமையில் மீட்பு பணியினர் கயிறை கட்டி, தவறி விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.