பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2023-10-30 10:14 IST

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மதுரை தெப்பக்குளம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் பசும்பொன் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்