சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு, செலவு விவரங்களை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் சபைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்வதை தடுக்கவும், கணக்குகளை சமர்ப்பிக்கவும் இந்து அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.