ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மடவார் வளாகம் அய்யப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. 10-வது நாள் நடைபெற்ற முகாமை மாவட்ட கல்வி அலுவலர் வீரபாண்டி ராஜ் தொடங்கி வைத்தார். கலசலிங்கம் தலைமை தாங்கினார். வைத்தியநாத சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி ஜவகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் முருகன், தொழிலதிபர் ராஜேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் திட்ட இயக்குனர் சிவகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.