மாங்காட்டில் கொத்தனாரை அடித்துக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலி கைது

மாங்காட்டில் கொத்தனாரை அடித்துக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-19 21:59 GMT

மாங்காடு,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 31), கிண்டியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மாங்காடு அடுத்த பத்ரிமேட்டையை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணோடு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மேலும் பாபு என்பவருடனும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் பாபுவுக்கும் அபிமன்யுவுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததால் கடந்த 2013- ம் ஆண்டு அபிமன்யுவை ராதிகா தனது வீட்டுக்கு வரவழைத்து மதுவை குடிக்க வைத்து போதையில் இருந்தபோது இருவரும் சேர்ந்து அபிமன்யுவின் தலையில் கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு உடலை கோணிப்பையில் கட்டி அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து மாங்காடு போலீசார் கொலை செய்யப்பட்ட அபிமன்யுவின் உடலை மீட்டு பிரேத் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் பாபு கோர்ட்டில் சரணடைந்தார்.

கைது

. இந்த கொலை சம்பவம் நடந்தது முதல் ராதிகா தலைமறைவாகி விட்டார். இவரை மாங்காடு போலீசார் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ராதிகாவை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாபுவுக்கும் அபிமன்யுவுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் அபிமன்யுவும் ராதிகாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்த நிலையில் பாபுவுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டி அபிமன்யுவை மது குடிக்க வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

கொலைக்கு பின்னர் தனது மகள்களை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு ஆந்திராவில் தங்கி வேலை செய்து கொண்டு அங்கு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தலை மறைவாக 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்